வியாழன், 13 செப்டம்பர், 2012

கமாடிட்டி சந்தை

   ந்த தொழில் செய்தாலும் அதற்குண்டான அடிப்படை நுணுகங்களை தெரிந்து கொண்டு இறங்கவேண்டும்.  . கமாடிட்டி சந்தைஇல் TRADING செய்வதற்கு சில அடிப்படை தகுதிகளை வளர்த்து  கொள்ளவேண்டும்  அது ஒருவரது புத்திகூர்மையின் வெளிப்பாடு. தாக்குப் பிடிக்கும் தன்மையின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் ஒரு யோகியின் விளையாட்டு. ஒரு விளையாட்டு வீரரை போலவும் போர்களத்தில் உள்ளவர் போலவும் துரித கதியில் திரும்பி தாக்குபவரின் வேகம் உள்ள விளையாட்டு.இன்று பலருக்கு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் சரிவர வாய்ப்புக்கள் இல்லாமல் போனதனால், பிறருக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இங்கேயோ, உங்கள் திறமை உங்கள் வெற்றி. உங்கள் வெற்றி உங்கள் லாபம். உங்கள் சந்தோஷம் .

1 . திட்டமிடல்
2 .அயராத உழைப்பு
3 . சூழ்நிலைக்கு தகுந்தவாறு  மாறுதல்

   கமாடிட்டி வணிகமும் பங்கு வணிகத்தினை போல ஒரு ஊகவணிகமே . ஆனால் பங்குகளாவது காரணமில்லாமல் தடால் என விழாது . ஆனால் கமாடிட்டி சந்தையில் பொருட்களின் வரத்து மற்றும் அதிக தயாரிப்பு தரம் குறைவு ஆகியவற்றால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் சந்தையில் உருவாக்கப்பட்டு பின்னர் பழைய நிலையையே கூட கொண்டு வருவார்கள் ..

இதில் ஈடுபட கமாடிட்டி டிரேடிங் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும் . (பங்கு வணிகத்தில் ஈடுபட அக்கௌன்ட் ஓபன் செய்வது போன்றே இதற்க்கு பான் கார்டு , வீட்டு முகவரி சான்று , வங்கி கணக்கு சான்று , ஆகியவை தேவை .)பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் .

இதில் நாம் தேசிய பங்கு சந்தையில் பியுச்சர் வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோ அதே போல தான் "மார்ஜின் " தொகையை மட்டும் செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும் எந்த ஒரு பொருளையும் நாம் வணிகம் செய்யலாம் . அதே போல எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள் தேவையோ அந்த மாதத்தில் வாங்கலாம் விற்கலாம் .

மற்ற படி எந்த கட்டு படும் இல்லை . சந்தையில் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நம்முடையது .அதற்க்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது ..

நாம் எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள் வாங்குகிறோமோ அந்த மாதம் முடிவு தினம் வரை வைத்து கொள்ளலாம் ( ?) இந்த கேள்விக் குறிக்கு விட கீழே .......

கமாடிட்டி வணிகத்தில் ஒப்பந்த முடிவு தேதிக்கு முன்னர் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் கட்டாய டெலிவரி எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது .. மேலும் அதன் மார்ஜின் தொகையை அதிகப்படுத்துவர்கள் .

( உதா ; தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வியாபாரம் செய்யும் பொழுது யாருக்கு டெலிவரி தர வேண்டும் .. என்ற கணக்கிற்காக இந்த முறை கடை பிடிக்க படுகிறது .)

ஏன் எனில் கடைசி வர்த்தக தினத்தன்று உள்ள பொசிசனை வைத்து தான் சந்தையில் யார் யாருக்கு டெலிவரி யார் யார் விற்பனை செய்யவார்கள் என்ற கணக்கு தெரியும் . ஆதலால் இந்த கட்டு பாடு ..

சரி நண்பர்களே !!!
சந்தை வியாபார முறை மற்றும் எப்படி உள்ளே வருவது போன்ற விபரங்களை பார்த்தோம் .. இனி இதில் உள்ள வியாபார நுணுக்கங்களை மற்றும் சிக்கல்களை பார்ப்போம் ..

கமாடிட்டி சந்தையில் " 200 " க்கு அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன . நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன . நாம் கடைகளில் பார்க்கிறோமே அதுபோல தான் பொருள் வரத்து அதிகரித்தால் எப்படி விலை சரியுமோ அது போல தான் இங்கும் . ஆனால் சந்தையில் சரியும் விலையை விட அதிகமா சரியும் அதேபோல பொருள் வரத்து குறையும் போதும் கடைகளை விட அதிகமாக ஏறும் . இந்த இரு நிலைகளையும் மாற்றி கூட செய்வார்கள் .. பொருள் கடைகளில் குறையும் பொழுது சந்தையில் செயற்கையாக விலையை அதிகப்படுத்துவர்கள் . அதே போல கடையில் பொருள் விலை அதிகரிக்கும் பொழுது சந்தையில் செயற்கையாக பொருள் விலை இறங்கும் .. இதுவும் நாம் பங்கு சந்தையில் கூறுவது போல ஆபரேடர் கைங்கர்யம் தான் ....

நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!
நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு வணிகம் செய்கிறோம் . ( பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால் அல்லது அதிகரித்தல் ) . ஆதலால் கவனம் அதிகம் தேவை .
மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம், வெள்ளி , காப்பர் , அலுமினியம் ,கச்சா என்னை போன்ற முக்கியமான பொருட்களும் வணிகம் ஆகின்றன இந்த பொருட்கள் எல்லாம் உலக சந்தையில் வணிகமாகும் விலையின் அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . ( உதா ; கச்சா என்னை , தங்கம் , வெள்ளி , போன்றவை அமெரிக்காசந்தையில் வணிகமாகும் விலையின் அடிப்படையில் தான் இங்கு வணிகமாகும் . அதே போல காப்பர் மற்றும் மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலை லண்டன் மற்றும் சீன சந்தை விலைகளை பொறுத்து வணிகமகும் .

ஆகவே நமது கவனம் உலக சந்தைகளை பார்த்தபடியே இருக்க வேண்டும் ..அதுவும் கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின் துவக்க நேரம் தெரிந்து கொண்டு தவறாது கண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன் வணிகம் செய்தல் தான் கமாடிட்டி சந்தையில் லாபத்தினை ஈட்ட முடியும் ..

நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க சர்க்யுட் பில்ட்டர் உள்ளது போல கமாடிட்டி சந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால் நமது சந்தையில் வணிகம் நிறுத்தப்படுவது போல அங்கு வணிகம் நிறுத்த மாட்டார்கள் தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர் அதிகப்படுத்துவர்கள் . அதற்க்கு 15 நிமிடம் சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல் நிறுத்தப்படும் பின்னர் தொடர்ந்து வணிகம் ஆகும்

2 கருத்துகள்:

  1. 19. மாடு பத்து ரூபாய்க்கு வாங்கி, சாட்டை நூறு ரூபாய்க்கு வாங்குவதை போல, சிலர் ப்ரோக்கரேஜ் ஆயிரக் கணக்கில் இருக்கம், ஆனால் லாபம் நூற்றுக் கணக்கில் கூட இருக்காது.
    தேவை இல்லாமல் இண்டிகேட்டர், வகுப்பு என விரயம் செய்ய வேண்டாம். குளத்தை விட, ஒரு புத்தகம் அதிகம் நீச்சல் கற்றுத் தர முடியாது. உங்களால் முடிந்த தொகையினைக் கொண்டு ஒரு பத்து சதவீதம் மட்டும் ரிஸ்க் எடுத்து அல்லது டெமோ அக்கௌன்ட் , பேப்பர் டிரேடிங்கில் வர்த்தகம் செய்தாலே போதுமானது.

    20. குறுகிய காலம், குறிகிய நீண்ட காலம், நீண்ட காலம் வர்த்தகம் அவசியம். இதில் ஒன்றினை மட்டும் செய்தவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லவே இல்லை.
    FOR MORE:
    http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

    பதிலளிநீக்கு